ADDED : டிச 10, 2024 01:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், டிச. 10-
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, காங்., கட்சி சார்பில், காங்., முன்னாள் தலைவர் சோனியாவின், 78வது பிறந்தநாள் விழா, நேற்று கொண்டாடப்பட்டது. மேற்கு மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமையில், ஓசூர் மாநகர தலைவர் தியாகராஜன் மற்றும் நிர்வாகிகள், ஓசூர் ஜி.ஹெச்.,ல் உள்நோயாளிகளுக்கு, ரொட்டி மற்றும் பழங்களை வழங்கினர். ஓசூர் பஸ் ஸ்டாண்டில், பயணிகளுக்கு மதிய உணவு வழங்கினர்.
* கிருஷ்ணகிரி நகர காங்., சார்பில், கிருஷ்ணகிரி ரவுண்டானாவில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. நகர தலைவர் லலித் ஆண்டனி தலைமை வகித்தார்.