/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம்; பக்தர்கள் சிறப்பு வழிபாடு
/
முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம்; பக்தர்கள் சிறப்பு வழிபாடு
முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம்; பக்தர்கள் சிறப்பு வழிபாடு
முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம்; பக்தர்கள் சிறப்பு வழிபாடு
ADDED : நவ 08, 2024 07:31 AM
கிருஷ்ணகிரி: ஓசூர், பெரியார் நகர் வேல் முருகன் கோவிலில், மஹா ஸ்கந்த சஷ்டி பெருவிழா கடந்த, 2ல், வேல்முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் தீபாராதனையுடன் துவங்கியது. யாகசாலை பூஜை, நவகலச பூஜை, ஹோமம், மாலையில் சுப்ரமண்ய சஹஸ்ரநாம அர்ச் சனை, யாகசாலை பூஜை, நவக சல பூஜை ஆகியவை நடந்தது. தொடர்ந்து, 3 முதல், 6ம் தேதி வரை தினமும் பூஜை நடந்து வந்த நிலையில், நேற்று சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி, வேல்முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை ஆகியவை நடந்தது. இன்று வள்ளி, தெய்வானை சமேத வேல்முருனுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. நாளை, வள்ளி, தெய்வானை சமேத வேல்முருகன் திருவீதி உலா நடக்க உள்ளது.
காவேரிப்பட்டணம் பன்னீர் செல்வம் தெருவிலுள்ள சவுந்தர்ய நாயகி சமேத சுகவனேஸ்வரர் கோவிலில் உள்ள, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலில், முதலாம் ஆண்டு கந்தசஷ்டி விழா கடந்த, 2ல் துவங்கி, நாளை வரை நடக்கிறது. நேற்று முருகனுக்கு அபிஷேக, ஆராதனை, இன்று காவேரிப்பட்டணம் மாரியம்மன் கோவில் பொதுமண்டில் சூரசம்ஹார நிகழ்ச்சியும், வள்ளி, தெய்வானை சமேத முருகனுக்கு திருக்கல்யாணமும் நடக்கிறது.
சூரசம்ஹார நிகழ்ச்சியை முன்னிட்டு, கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளி வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலில், முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை ஆகியவை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இதே போல், மாவட்டம் முழுவதும் உள்ள முருகர் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை, வழிபாடு நடந்தது.

