/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரோந்து செல்ல போலீசாருக்கு எஸ்.பி., உத்தரவு
/
ரோந்து செல்ல போலீசாருக்கு எஸ்.பி., உத்தரவு
ADDED : டிச 18, 2025 06:22 AM
போச்சம்பள்ளி: பர்கூர் சப்டிவிசனுக்கு உட்பட்ட, நாகரசம்பட்டி போலீஸ் ஸ்டேசனில் நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி., தங்கதுரை ஆய்வு மேற்கொண்டார். அதில் ஸ்டேஷனில் உள்ள பதிவேடுகள் சரியாக பராமரிக்கப்படுகிறதா என ஆய்வு செய்தார். நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து ஆய்வு செய்து விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் எவ்வித சமூக விரோத செயல்கள் நடக்காமல் இருக்க போலீசார் ரோந்து பணி மேற்கொள்ள உத்தரவிட்டார். அங்கு எஸ்.பி.,யை பார்த்த, 10க்கும் மேற்பட்ட, மூன்று முதல் 6 வயதுடைய குழந்தைகள் போலீஸ் ஸ்டேசன் நுழைவாயில் பகுதிக்கு வந்ததால், அவர்களுக்கு எஸ்.பி., தன் சொந்த பணத்தில் நோட்டு, பேனா, பென்சில் உள்ளிட்ட, மாணவர்களுக்கு தேவையான பொருட்களை வழங்கினார்.

