ADDED : டிச 18, 2025 06:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: ஓசூர் ஒன்றியம், ஈச்சங்கூர் பஞ்.,ல் கனிமங்கள் மற்றும் குவாரிகள் நிதியிலிருந்து, பாகலுார் - சர்ஜாபுரம் சாலையிலிருந்து, கூலிகானப்பள்ளி கிராமம் வரை தார்ச்சாலை அமைக்க, 19.32 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இப்பணியை, ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார். தி.மு.க., ஒன்றிய செயலாளர் கஜேந்திரமூர்த்தி, துணை செயலாளர் வீரபத்திரப்பா உட்பட பலர் பங்கேற்றனர்.

