/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
திருநங்கைகளுக்கு 24ல் சிறப்பு முகாம்
/
திருநங்கைகளுக்கு 24ல் சிறப்பு முகாம்
ADDED : ஜூன் 13, 2025 01:15 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரியில் வரும், 24ல் மாவட்டத்திலுள்ள திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் நடக்கிறது.
இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து திருநங்கைகளும், நலவாரியத்தில் பதிவு செய்து கொள்ளும் வகையில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம், வரும், 24 காலை, 11:00 மணி முதல், மதியம், 2:00 மணி வரை, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. முகாமில், திருநங்கைகள் நலவாரியத்தில், அடையாள அட்டை பெற பதிவு செய்தல், ஆதார் அட்டை திருத்தம், முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டம், ஆயுஷ்மான் பாரத் அட்டை மற்றும் வாக்காளர் அட்டை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.