/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பழங்குடியினருக்கு சிறப்பு முகாம்
/
பழங்குடியினருக்கு சிறப்பு முகாம்
ADDED : ஜூன் 21, 2025 12:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தாலுகா அலுவலக வளாகத்தில், பழங்குடியினருக்கான சிறப்பு முகாம் நேற்று நடந்தது. மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ரமேஷ்குமார் தலைமை வகித்தார். ஊத்தங்கரை தாசில்தார் மோகன்தாஸ் முன்னிலை வகித்தார்.
முகாமில், ஊத்தங்கரை வட்டத்தில் உள்ள பழங்குடியின மக்கள் ஆதார்கார்டு, ஜாதி சான்றிதழ், குடியிருப்பு சான்றிதழ், முதியோர் ஓய்வூதியம், விதவை, ஊனமுற்றோர் உதவித் தொகை மற்றும் வீட்டுமனை பட்டா கேட்டு, 102 பேர் மனு கொடுத்தனர்.