/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்
/
வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்
ADDED : நவ 24, 2024 12:45 AM
வாக்காளர் பட்டியல் பெயர்
சேர்க்க சிறப்பு முகாம்
ஓசூர், நவ. 24-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள, அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் ஆதார் எண் இணைத்தல் ஆகியவற்றை வாக்காளர்கள் மேற்கொள்ளும் வகையில் நேற்று சிறப்பு முகாம் நடந்தது. வேப்பனஹள்ளி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, ராயக்கோட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடந்த வாக்காளர் சிறப்பு சுருக்க, திருத்த முகாமை மாவட்ட ஆயத்துறை உதவி ஆணையர் குமரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்டத்தில் உள்ள அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களில் இன்றும் (நவ., 24) சிறப்பு முகாம் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.