/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தன்வந்திரி கோவிலில் சிறப்பு ஹோமங்கள்
/
தன்வந்திரி கோவிலில் சிறப்பு ஹோமங்கள்
ADDED : ஜூலை 31, 2025 01:36 AM
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அதியமான் இன்ஜினியரிங் கல்லுாரி வளாகத்தில் உள்ள தன்வந்திரி கோவிலில், ஆடி மாதத்தையொட்டி நேற்று காலை, 6:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, மூலவர் தன்வந்திரி சுவாமிக்கு சிறப்பு பூஜை, அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டது.
தொடர்ந்து, கணபதி ஹோமம், ஆயுஷ் ஹோமம், தன்வந்திரி ஹோமம் நடந்தது. நண்பகல், 12:00 மணிக்கு கோவில் நடை சாத்தப்பட்டது. பின்னர் மாலை, 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மாலை, 5:00 மணிக்கு மேல், அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, அதியமான் கல்லுாரி மேலாளர் நாராயணன் மற்றும் கோவில் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.