/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பொதுத்தேர்வில் நல்ல மார்க் பெற வேண்டி சிறப்பு பூஜை
/
பொதுத்தேர்வில் நல்ல மார்க் பெற வேண்டி சிறப்பு பூஜை
பொதுத்தேர்வில் நல்ல மார்க் பெற வேண்டி சிறப்பு பூஜை
பொதுத்தேர்வில் நல்ல மார்க் பெற வேண்டி சிறப்பு பூஜை
ADDED : பிப் 10, 2025 01:30 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் முனீஸ்வர் நகரிலுள்ள விஜய விநாயகர் சத் சங்கத்தில், விஜய விநாயகர், மகா லட்சுமி, மகா சரஸ்வதி சன்னதிகள் உள்ளன. இங்கு ஒவ்வொரு ஆண்டும், 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுவும் மாணவ, மாணவியர் நல்ல மதிப்பெண் பெற்று, உயர் கல்வி பெற வேண்டி, சிறப்பு பூஜை நடப்பது வழக்கம்.
இந்தாண்டு, 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்று, 108 குங்கும அர்ச்சனை செய்து, சரஸ்வதி தேவியை நேற்று வழிபட்டனர். விஜய விநாயகருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, மாணவ, மாணவியர் கையில் ரக்சை கயிறு கட்டப்பட்டது. மேலும், சரஸ்வதி தேவிக்கு தேன் அபிஷேகம் செய்து, அது மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்டது. அர்ச்சனை செய்யப்பட்ட குங்குமத்தை, மாணவ, மாணவியர் பிரசாதமாக வீடுகளுக்கு எடுத்து சென்றனர். ஏற்பாடுகளை, விஜய விநாயகர் சத்சங்க நிர்வாகி கண்ணாமணி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.