/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கி.கிரி அரசு மகளிர் கல்லுாரியில் 21, 22ல் பேச்சு போட்டிகள்
/
கி.கிரி அரசு மகளிர் கல்லுாரியில் 21, 22ல் பேச்சு போட்டிகள்
கி.கிரி அரசு மகளிர் கல்லுாரியில் 21, 22ல் பேச்சு போட்டிகள்
கி.கிரி அரசு மகளிர் கல்லுாரியில் 21, 22ல் பேச்சு போட்டிகள்
ADDED : ஜூலை 09, 2025 02:04 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக அறிக்கை: கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலை கல்லுாரியில் வரும், 21ல், அம்பேத்கர் பிறந்த நாள் பேச்சு போட்டியும், 22ல், கருணாநிதி பிறந்த நாள் பேச்சு போட்டியும் நடக்கிறது. பள்ளி மாணவர்களுக்கு காலையும், கல்லுாரி மாணவர்களுக்கு பிற்பகலும் நடக்கின்றன.
அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளி மாணவர்கள், அரசு, தனியார், அரசு உதவி பெறும் கல்லுாரிகள், பொறியியல், மருத்துவம், பல்தொழில்நுட்ப கல்லுாரி மாணவர்கள் இதில் பங்கேற்கலாம். போட்டிகள் குறித்த விபரங்கள் பள்ளிகளுக்கு மாவட்ட சி.இ.ஓ., மூலமும், கல்லுாரிகளுக்கு கல்லுாரி கல்வி இணை இயக்குனர் மூலமும் அனுப்பப்படும்.
பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, மாவட்ட அளவில் முதல் பரிசு, 5,000 ரூபாய், 2ம் பரிசு, 3,000 ரூபாய், 3ம் பரிசு, 2,000 ரூபாய் வழங்கப்படுகிறது. பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்பெறும் பேச்சு போட்டியில் மட்டும், தங்கள் பேச்சுத்திறனை சிறப்பாக வெளிப்படுத்திய அரசு பள்ளி மாணவர்கள் இருவர் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசு, 2,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.