தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ வேகத்தடைக்கு அறிவிப்பு பலகை

வேகத்தடைக்கு அறிவிப்பு பலகை

வேகத்தடைக்கு அறிவிப்பு பலகை


ADDED : நவ 21, 2025 01:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 21, 2025 01:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியிலிருந்து, காரிமங்கலம் செல்லும் சாலையில், போச்சம்பள்ளியிலிருந்து செல்லம்பட்டி வரை, ஏற்கனவே இருந்த தார்ச்சாலை மீது புதியதாக தார்ச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சாலையில் பெரியகரடியூரில், அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் பஞ்., அலுவலகம் உள்ள பகுதியில், கடந்த ஒரு வாரத்திற்கு முன் புதியதாக வேகத்தடை அமைக்கப்பட்டது.

புதியதாக அமைக்கப்பட்ட வேகத்தடை இருப்பது தெரியாமல், இந்த சாலையில், 20, 30 ஆண்டுகளுக்கு மேலாக சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் வேகத்தடையை கடக்கும்போது, தவறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். இப்பகுதியில் வேகத்தடை உள்ளது என விளம்பர பலகை அல்லது பேரிகார்டு அமைக்க வேண்டுமென, கடந்த, 18ல் நம், 'காலைக்கதிர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இந்நிலையில் தற்போது, அப்பகுதியில் விளம்பர பலகை மற்றும் பேரி கார்டு

வைக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us