/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அரசு பாலிடெக்னிக்கில் விளையாட்டு போட்டிகள்
/
அரசு பாலிடெக்னிக்கில் விளையாட்டு போட்டிகள்
ADDED : மார் 13, 2024 02:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி
அரசு பாலிடெக்னிக்கில் நேற்று, ஆண்டுவிழா மற்றும் விளையாட்டு
போட்டிகள் நடந்தது. கல்லுாரி முதல்வர் சாரதா தலைமை வகித்தார். பர்கூர்
அரசு பொறியியல் கல்லுாரி உதவி பேராசிரியர் கார்த்திகேயன், டாக்டர்
கேசவன் பேசினர்.
கல்லுாரியில் நடந்த பல்வேறு விளையாட்டு
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு கேடயம் மற்றும்
கோப்பைகள் பரிசாக வழங்கப்பட்டன. நாட்டாண்மைகொட்டாய் அரசு
உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியை மணிமேகலை, மாணவர்களுக்கு,
'மஞ்சப்பை' வழங்கி பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து பேசினார்.

