/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கருணாநிதி பிறந்த நாளையொட்டி விளையாட்டு உபகரணம் வழங்கல்
/
கருணாநிதி பிறந்த நாளையொட்டி விளையாட்டு உபகரணம் வழங்கல்
கருணாநிதி பிறந்த நாளையொட்டி விளையாட்டு உபகரணம் வழங்கல்
கருணாநிதி பிறந்த நாளையொட்டி விளையாட்டு உபகரணம் வழங்கல்
ADDED : ஜூன் 05, 2025 01:01 AM
கிருஷ்ணகிரி, மறைந்த முன்னாள் முதல்-வர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, தி.மு.க., சார்பில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி கிருஷ்ணகிரியிலுள்ள மாவட்ட, தி.மு.க., அலுவலகத்திலும், பர்கூர், எம்.எல்.ஏ., அலுவலகத்திலும் கருணாநிதி படத்திற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., மாலை அணிவித்து மலர் துாவி மரியாதை செலுத்தினார். பர்கூர் பஸ் ஸ்டாண்ட் அருகில், கேக் வெட்டி அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. அதேபோல, பர்கூர் மனவளர்ச்சி குன்றியோருக்கான பள்ளி, ஐ.இ.எல்.சி., பார்வையற்றோர் பள்ளி, தொழுநோய் மறுவாழ்வு மையம் ஆகியவற்றில், அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. மேலும் மரக்கன்றுகள் நடப்பட்டன. கிருஷ்ணகிரி கட்டிகானப்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு இனிப்பு வழங்கப்பட்டன. தி.மு.க., கிழக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் மாணவ, மாணவியருக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
மாவட்ட அவைத்தலைவர் தட்ரஹள்ளி நாகராஜ், நகர பொறுப்பாளர்கள் அஸ்லம், வேலுமணி, மாவட்ட துணை செயலாளர் கோவிந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.