/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் ஸ்ரீசரஸ்வதி வித்யாலயா பள்ளி சாதனை
/
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் ஸ்ரீசரஸ்வதி வித்யாலயா பள்ளி சாதனை
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் ஸ்ரீசரஸ்வதி வித்யாலயா பள்ளி சாதனை
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் ஸ்ரீசரஸ்வதி வித்யாலயா பள்ளி சாதனை
ADDED : மே 17, 2025 01:18 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அடுத்த குந்தாரப்பள்ளியில் உள்ள, ஸ்ரீசரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
மாணவி நயனிஷா, 500க்கு, 497 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். அதே போல் சவுந்தர்யா ஸ்ரீ, 496 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடமும், லாவண்யா, 493 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடமும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். சாதனை படைத்த மாணவியரை ஸ்ரீசரஸ்வதி வித்யாலயா கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் அன்பரசன், தாளாளர் சங்கீதா அன்பரசன், மேலாளர் பூபேஷ், மெட்ரிக் பள்ளி முதல்வர் ரமணன் மற்றும் வகுப்பாசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.