/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஹிந்துக்களுக்கு ஸ்டாலின் குரல் கொடுக்கவில்லை ராம நம்பி நாராயணன் ஆதங்கம்
/
ஹிந்துக்களுக்கு ஸ்டாலின் குரல் கொடுக்கவில்லை ராம நம்பி நாராயணன் ஆதங்கம்
ஹிந்துக்களுக்கு ஸ்டாலின் குரல் கொடுக்கவில்லை ராம நம்பி நாராயணன் ஆதங்கம்
ஹிந்துக்களுக்கு ஸ்டாலின் குரல் கொடுக்கவில்லை ராம நம்பி நாராயணன் ஆதங்கம்
ADDED : டிச 12, 2024 01:24 AM
ஓசூர், டிச. 12-
வெளிநாடுகளில் சிறுபான்மையினராக இருக்கும் ஹிந்துக்களுக்காக, ராகுல், மம்தா, அரவிந்த் கெஜ்ரிவால், ஸ்டாலின் உள்ளிட்ட யாரும் குரல் கொடுக்கவில்லை,'' என, பா.ஜ.,வின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான, 'ஒரே நாடு' ஆசிரியர் ராம நம்பி நாராயணன் கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், வங்கதேச ஹிந்து உரிமை மீட்பு குழு கருத்தரங்கம் நடந்தது. இதில் பங்கேற்ற அவர், நிருபர்களிடம் கூறியதாவது:
வங்கதேசத்திலுள்ள, 92.5 சதவீத இஸ்லாமியர்களுக்கு, அங்குள்ள, 7.5 சதவீத ஹிந்துக்களால் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால், ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்திய சிறுபான்மையினருக்காக குரல் கொடுக்கும் ராகுல், மம்தா, அரவிந்த் கெஜ்ரிவால், ஸ்டாலின், உத்தவ் தாக்கரே உள்ளிட்ட யாரும், வெளிநாடுகளில் சிறுபான்மையினராக இருக்கும் ஹிந்துக்களுக்காக குரல் கொடுக்கவில்லை.
அவர்கள் வாய்மூடி இருப்பதால், அவர்களை ஹிந்து விரோத கட்சி என நான் கூறவில்லை. பா.ஜ.,வை வகுப்புவாதம் என கூறும் அவர்கள், ஏன் ஹிந்துக்களை காப்பாற்ற வரவில்லை. நீங்கள் எங்களுடன் மேடைக்கு வரலாமே.
இந்தியாவில், சிறுபான்மையினருக்கு என்ன பாதிப்பு என அவர்கள் கூற வேண்டும். வங்கதேசத்தில், ஹிந்துக்களுக்கு பாதிப்பு வந்தால், அவர்கள் இந்தியாவிற்கு வரலாம். அதில் தவறு இல்லை. ஆனால், அங்கு பெரும்பான்மையாக உள்ள இஸ்லாமியர்கள் ஒன்றரை கோடி பேர் இந்தியா வந்துள்ளதால், அங்கு அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என தெரிகிறது. இந்தியாவில், இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு இல்லை. சிறுபான்மையினர் வாழ்வதற்கு ஏற்ற தேசம் இல்லை என்றால், ராகுல், ஸ்டாலின் ஆகியோர், இந்தியாவில் பாதுகாப்பு இல்லை எனக்கூறிச்சென்ற ஒரு இஸ்லாமிய குடும்பத்தின் பெயரை கூறுங்கள். வங்கதேசம், பாகிஸ்தானில் இஸ்லாமியர்களுக்கே பாதுகாப்பில்லை என்பதால் இங்கு வருகின்றனர், அவர்களை இந்தியா காப்பாற்றி வருகிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.
ஆர்.எஸ்.எஸ்., மாநில இணை செயலாளர் ராம ராஜேசேகர், பா.ஜ., மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ், செயலாளர் பிரவீன்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

