/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தி.மு.க., தொண்டர்களை ஸ்டாலின் நம்பவில்லை கூட்டணி கட்சியினரை தான் நம்பியுள்ளார்; முனுசாமி
/
தி.மு.க., தொண்டர்களை ஸ்டாலின் நம்பவில்லை கூட்டணி கட்சியினரை தான் நம்பியுள்ளார்; முனுசாமி
தி.மு.க., தொண்டர்களை ஸ்டாலின் நம்பவில்லை கூட்டணி கட்சியினரை தான் நம்பியுள்ளார்; முனுசாமி
தி.மு.க., தொண்டர்களை ஸ்டாலின் நம்பவில்லை கூட்டணி கட்சியினரை தான் நம்பியுள்ளார்; முனுசாமி
ADDED : நவ 10, 2024 01:11 AM
தி.மு.க., தொண்டர்களை ஸ்டாலின் நம்பவில்லை
கூட்டணி கட்சியினரை தான் நம்பியுள்ளார்; முனுசாமி
ஓசூர், நவ. 10-
''தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தன் கட்சி தொண்டர்களை நம்பவில்லை. கூட்டணி கட்சியினரை தான் நம்பியுள்ளார்,'' என, அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் முனுசாமி
எம்.எல்.ஏ., பேசினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தெற்கு ஒன்றியம் மற்றும் ஓசூர் மாநகர தெற்கு பகுதி, அ.தி.மு.க., சார்பில், கட்சி வளர்ச்சி பணி மற்றும் மக்கள் பணிகள் குறித்த செயல்வீரர் கூட்டம் தனித்தனியாக நடந்தது. ஒன்றிய செயலாளர் ஹரிஷ்ரெட்டி, பகுதி செயலாளர் வாசுதேவன் தலைமை வகித்தனர். மேற்கு மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணாரெட்டி
முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், கட்சியின் துணை பொதுச்செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ., பேசியதாவது: அ.தி.மு.க., வரும், 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும். அ.தி.மு.க., ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் கட்சியினர் கூறுவதுடன், திண்ணை பிரசாரம் செய்து கடுமையாக உழைக்க வேண்டும். அப்போது தான், மக்களை நேசிக்கும், அ.தி.மு.க., பக்கம் அனைவரும் வருவர். அ.தி.மு.க., கொண்டு வந்த திட்டங்களால், கிராமப்புற பெண்கள் வேலைக்கு சென்று சம்பாதிக்கின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு எந்த திட்டத்தையும், தி.மு.க., கொண்டு வரவில்லை. பத்திரிகை, ஊடகங்களை வைத்து ஏமாற்றும் கட்சி என மக்கள் நினைக்கின்றனர். முதல்வர் ஸ்டாலின் திட்டங்களை அறிவித்தாலும், செயல்பாட்டிற்கு வருவதில்லை. தேர்தல்களில் தனித்து நிற்க முதல்வர் ஸ்டாலினுக்கு பலம் இல்லை. அவர், தன் கட்சியினரை நம்பவில்லை. கூட்டணி கட்சிகளைத்தான் நம்புகிறார். அவர்களது கூட்டணியில் விரிசல் விழுகிறது. வரும் தேர்தலில், தி.மு.க., - அ.தி.மு.க., இடையே மட்டுமே போட்டி உள்ளது. இவ்வாறு, அவர் பேசினார்.
ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் சிட்டி ஜெகதீசன் உட்பட பலர் பங்கேற்றனர்.