/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்
/
'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்
ADDED : ஜூலை 18, 2025 01:29 AM
ஓசூர், ஓசூர் ஊராட்சி ஒன்றியம், நவதி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடந்த, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமை, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் ஆய்வு செய்தார். தொடர்ந்து, முதல்வர் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டைகள், வருமான சான்றிதழ், ஜாதி சான்றிதழ்கள் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு, உடனடி நடவடிக்கையாக, 8 நபர்களுக்கு, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டைகள், வருமான சான்றிதழ், ஜாதி சான்றிதழ்கள், குறு விவசாயி சான்று மற்றும் மின் இணைப்பில் பெயர் மாற்றத்திற்கான ஆணைகளை மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வழங்கினார். ஓசூர் தாசில்தார் பரிமேலழகர், பி.டி.ஓ.,க்கள் முருகன், விஜயா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
* ஊத்தங்கரை அடுத்த, சாமல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், சாமல்பட்டி, நாரலப்பள்ளி ஆகிய பஞ்.,க்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை தாசில்தார் மோகன்தாஸ் தலைமை வகித்தார். பி.டி.ஓ., சாவித்திரி முன்னிலை வகித்தார். முகாமில், ஊராட்சி, வருவாய் துறை, மருத்துவத்துறை, கூட்டுறவு, மாற்றுத்திறனாளிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி
யினர் நலத்துறை, கால்நடை மற்றும் பராமரிப்பு துறை, சமூக நலன், வேளாண் துறை என பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.