/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்
/
உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்
ADDED : ஜூலை 25, 2025 12:52 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம் ஆலப்பட்டி, கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியம் பேவநத்தம் மற்றும் ஓசூர் மாநகராட்சி பகுதிகளில் நடந்த, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமை, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், எம்.எல்.ஏ.,க்கள் பர்கூர் மதியழகன், ஓசூர் பிரகாஷ், தளி ராமச்சந்திரன் மற்றும் ஓசூர் மாநகராட்சி மேயர் சத்யா ஆகியோர் ஆய்வு செய்தனர்.
*போச்சம்பள்ளி அடுத்த, ஜிங்கல்கதிரம்பட்டி, தாதம்பட்டி ஆகிய, 2 பஞ்.,களுக்கு ஜிங்கல்கதிரம்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் நேற்று முகாம் நடந்தது. இதில், 12 அரசு துறைகளின், 45 சேவைகளை வழங்கும் விதமாக, துறை சார்ந்த அதிகாரிகள் வந்திருந்தனர். பர்கூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன், பெறப்பட்ட மனுக்களுக்கு, உடனடி தீர்வு காண துறை சார்ந்த அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். அப்போது, போச்சம்பள்ளி தாசில்தார் சத்யா, பர்கூர் பி.டி.ஓ., செந்தில் கலந்து கொண்டனர்.