/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட மருத்துவ முகாம்
/
நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட மருத்துவ முகாம்
ADDED : ஆக 24, 2025 12:49 AM
தளி, கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட மருத்துவ முகாம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், ஓசூர், தி.மு.க., -எம்.எல்.ஏ., பிரகாஷ், தளி, இ.கம்யூ., - எல்.எல்.ஏ., ராமச்சந்திரன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். முகாமில் மொத்தம், 1,362 பேர் பதிவு செய்து, மருத்துவ பரிசோதனைகளை செய்து கொண்டனர். பாதிப்பு இருப்பவர்கள் கண்டறியப்பட்டு, மேல்சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனை மற்றும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர்.
முகாமில், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் விண்ணப்பித்த, 40 பேருக்கு உடனடியாக கார்டுகள் வழங்கப்பட்டன. மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டைகளுக்கும் வழங்கப்பட்டன. மாவட்ட சுகாதார அலுவலர் ரமேஷ்குமார், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் மாதேஸ்வரன், மாவட்ட பொது மேலாளர் (தாட்கோ) வேல்முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.