ADDED : ஜூலை 30, 2025 01:38 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி நகராட்சியில், சென்னை சாலையிலுள்ள தனியார் மண்டபத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நேற்று நடந்தது. இதில் அரங்குகள் அமைக்கப்பட்டு பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டன. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், மதியழகன் எம்.எல்.ஏ., ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இது குறித்து நகராட்சி அலுவலர்கள் கூறுகையில், 'இந்த முகாம் மூலம், 13 துறைகளை சேர்ந்த, 43 சேவைகள் வழங்கப்படுகிறது. பொதுமக்கள் அளித்த, 106 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது' என்றனர்.
நகராட்சி கமிஷனர் ஸ்டான்லி பாபு, தி.மு.க., நகர பொறுப்பாளர்கள் அஸ்லம், வேலுமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
* மத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட, அந்தேரிப்பட்டி, கொடமாண்டப்பட்டி, கெரிகேப்பள்ளி உள்ளிட்ட பஞ்.,களுக்கு கெரிகேப்பள்ளியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் முகாம் நடந்தது. இதில், 300க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர். இதில் போச்சம்பள்ளி தாசில்தார் சத்யா, மத்துார் பி.டி.ஓ.,க்கள் சாவித்திரி, செல்லக்கண்ணாள் கலந்து கொண்டனர்.
* பர்கூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட, புளியம்பட்டி, வலசகவுண்டனுார் பஞ்.,களுக்கு புளியம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் முகாம் நடந்தது. இதில், 300க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர். இதில், பர்கூர், தி.மு.க., எம்.எல்.ஏ., மதியழகன், ஒன்றிய செயலாளர் சாந்தமூர்த்தி, ரங்கநாதன், பி.டி.ஓ., செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
* பாகலுார் அருகே குடிசெட்லு திம்மராய சுவாமி கோவில் வளாகத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நேற்று நடந்தது. இதில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அதிகாரிகளிடம் கொடுத்தனர். முகாமை பார்வையிட்ட ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், மனுக்கள் மீது எடுக்கப்பட்ட உடனடி நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். தி.மு.க., ஒன்றிய பொறுப்பாளர் லோகேஷ்ரெட்டி, நிர்வாகி ரமேஷ், மாவட்ட ஆதிதிராவிடர் அணி தலைவர் முனிராஜ், விவசாய அணி அமைப்பாளர் ஆனந்தப்பா உட்பட பலர் பங்கேற்றனர்.