ADDED : அக் 08, 2025 01:29 AM
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி, 33வது வார்டுக்கு, சாந்தி நகர் சி.எஸ்.ஐ., பள்ளியிலும், 43, 44 மற்றும் 45வது வார்டுகளுக்கு, மத்திகிரி அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நேற்று நடந்தது. மகளிர் உரிமைத்தொகை, வீட்டுமனைப்பட்டா, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, முதல்வர் காப்பீட்டு திட்டம், பட்டா மாற்றம், ரேஷன் கார்டு உட்பட பல்வேறு துறை சார்ந்த மனுக்களை ஆயிரக்கணக்கான மக்கள் வழங்கினர். பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனைகளும் செய்யப்பட்டன.
ஓசூர் மாநகர மேயர் சத்யா, கமிஷனர் முகம்மது ஷபீர் ஆலம் ஆகியோர், முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். துணை மேயர் ஆனந்தய்யா, மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், வரி விதிப்பு குழு தலைவர் சென்னீரப்பா, கவுன்சிலர்கள் மஞ்சுளா முனிராஜ், இந்திராணி, தி.மு.க., இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் சுமன், பகுதி செயலாளர் ராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.