/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூரில் இன்று துவங்குகிறது நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்
/
ஓசூரில் இன்று துவங்குகிறது நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்
ஓசூரில் இன்று துவங்குகிறது நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்
ஓசூரில் இன்று துவங்குகிறது நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்
ADDED : ஆக 02, 2025 01:24 AM
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஓசூர், காமராஜ் காலனி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும் துவக்கப்பள்ளியில், 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட முகாம் இன்று (ஆக., 2) காலை, 9:00 முதல், மாலை, 4:00 மணி வரை நடக்கிறது. முகாமை முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக துவக்கி வைக்கிறார்.
முகாமில், பொதுமக்களுக்கு தேவையான ரத்த பரிசோதனை, கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் பரிசோதனை, இ.சி.ஜி., எக்கோ, அல்ட்ரா சவுண்ட், கண் பரிசோதனை போன்ற அனைத்து வகையான பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.
முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை மற்றும் தொழிலாளர்களுக்கு உடல் பரிசோதனை செய்யப்பட்டு, சிறப்பு சிகிச்சை வழங்கப்பட உள்ளது. முகாமில் தொற்றா நோய், உயர் ரத்த அழுத்தம், கண் பார்வை, சிறுநீரகம், இதய பரிசோதனை, நரம்பியல், சித்த மருத்துவம் உட்பட, 17 வகையான மருத்துவ பரிசோதனை, சிறப்பு மருத்துவர்கள் மூலம் செய்யப்பட உள்ளது.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.