sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம்: முதல் கட்டமாக 78 முகாம்்

/

'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம்: முதல் கட்டமாக 78 முகாம்்

'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம்: முதல் கட்டமாக 78 முகாம்்

'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம்: முதல் கட்டமாக 78 முகாம்்


ADDED : ஜூலை 14, 2025 03:45 AM

Google News

ADDED : ஜூலை 14, 2025 03:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்-டுள்ள அறிக்கை:

மாவட்டத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில், நகர் பகு-தியில், 55 முகாம், ஊரக பகுதிகளில், 173 முகாம் நடத்தப்பட உள்ளன.

முதற்கட்டமாக நாளை (ஜூலை 15) முதல், ஆக., 14 ம் தேதி வரை, ஓசூர் மாநகராட்சியில், 10 முகாம், கிருஷ்ணகிரி நக-ராட்சியில், 5 முகாம், பர்கூர் மற்றும் நாகோஜனஹள்ளி டவுன் பஞ்.,க்களில் தலா, 2 முகாம், 10 ஒன்றியங்களில் உள்ள கிராம பஞ்.,க்களில், 59 முகாம் நடக்க உள்ளன. இத்திட்டத்தில் தன்னார்-வலர்கள் ஒவ்வொரு வீட்டிற்குள் நேரடியாக சென்று, முகாமில் வழங்கப்பட உள்ள பல்வேறு அரசு துறை திட்டங்கள், சேவைகள், பயனடைய தேவைப்படும் ஆவணங்கள் குறித்து, தக-வல்களை தெரிவித்துள்ளனர். மேலும், வீடுகள் தோறும் விண்-ணப்பத்தை வழங்கி வருகின்றனர்.இந்த முகாம்களில் மட்டுமே, கலைஞர் மகளிர் உரிமைத்

தொகை பெற தகுதியுள்ள விடுபட்ட மகளிருக்கு விண்ணப்-பங்கள் வழங்கப்படும். முகாம்களில் பெறப்படும் விண்ணப்-பங்கள் மீது, 45 நாட்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஓசூர் மாநகராட்சி, 1, 2, 3 ஆகிய வார்டுகளுக்கு, ஜூஜூவாடி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும் 12, 13, 14 ஆகிய வார்டுக-ளுக்கு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலக வளாகம் ஆகிய-வற்றில் நாளை (ஜூலை 15) மற்றும் 16ம் தேதி இரு நாட்கள் முகாம் நடக்கிறது.

கிருஷ்ணகிரி நகராட்சி, 31, 32, 33 ஆகிய வார்டுகளுக்கு, சேலம் சாலையில் உள்ள மீனாட்சி மகால் மண்டபம், பர்கூர் டவுன் பஞ்., 1 முதல், 8 வார்டுகளுக்கு, டி.ஆர்., மகாலிலும், ஓசூர் ஒன்றியம், நல்லுார் பஞ்.,க்கு, நல்லுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, கிருஷ்ணகிரி ஒன்றியம், அகசிப்பள்ளி பஞ்.,க்கு, கிட்டம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் நாளை (ஜூலை 15) ஒரு நாள் மட்டும் முகாம் நடக்கிறது.

வரும், 16ம் தேதி, நாகோஜனஹள்ளி டவுன் பஞ்.,க்கு உட்-பட்ட, 1 முதல் 6 வார்டுளுக்கு, வேலம்பட்டி சமுதாய கூட்டத்-திலும், ஊத்தங்கரை ஒன்றியத்திற்கு உட்பட்ட உப்பாரப்பட்டி, கெங்கபிராம்பட்டி பஞ்.,க்களுக்கு, உப்பாரப்பட்டி அரசு மேல்-நிலைப் பள்ளியிலும், காவேரிபட்டணம் ஒன்றியத்திற்கு உட்-பட்ட எருமாம்பட்டி, பாலேகுளி, மலையாண்டஹள்ளி பஞ்.,க்களுக்கு, கூரம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி-யிலும், பர்கூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒப்பதவாடி பஞ்.,க்கு, அப்பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியிலும் முகாம் நடக்-கிறது. இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us