/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பஞ்.,களில் விளையாட்டு மன்றங்கள் துவங்கி வீரர்களை ஊக்கப்படுத்துங்கள்; சக்கரபாணி
/
பஞ்.,களில் விளையாட்டு மன்றங்கள் துவங்கி வீரர்களை ஊக்கப்படுத்துங்கள்; சக்கரபாணி
பஞ்.,களில் விளையாட்டு மன்றங்கள் துவங்கி வீரர்களை ஊக்கப்படுத்துங்கள்; சக்கரபாணி
பஞ்.,களில் விளையாட்டு மன்றங்கள் துவங்கி வீரர்களை ஊக்கப்படுத்துங்கள்; சக்கரபாணி
ADDED : டிச 08, 2024 01:02 AM
கிருஷ்ணகிரி, டிச. 8-
''கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பஞ்., தோறும் விளையாட்டு மன்றங்கள் துவங்கி, விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்துங்கள்,'' என, அமைச்சர் சக்கரபாணி பேசினார்.
வேலுார் மாவட்டத்தில், கருணா நிதி நுாற்றாண்டு விழாவையொட்டி, வேலுார், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் நீலகிரி ஆகிய, 4 மாவட்டங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்புகளை, துணை முதல்வர் உதயநிதி வழங்கினார். தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், 333 பஞ்.,களுக்கும், 33 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய, 541 தொகுப்புகளை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார். மாவட்ட கலெக்டர் சரயு, தி.மு.க., - எம்.எல்.ஏ.,-க்கள் மதியழகன், பிரகாஷ் முன்னிலை வகித்தனர்.
விழாவில், அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது: விளையாட்டில் திறமையானவர்களை உருவாக்கும் நோக்கத்தில், 'கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட்ஸ்' திட்டம் தொடங்கப்பட்டு, 30 மாவட்டங்களுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த விளையாட்டு உபகரணங்கள் மூலம் கிராமங்களிலுள்ள விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பயன்பெறுவர். ஒவ்வொரு பஞ்.,களிலும் மேலாண்மை குழு, பள்ளி ஆசிரியர்கள் அடங்கிய விளையாட்டு மன்றம் துவக்கப்படவேண்டும். அதில் விளையாட்டு வீரர்களை உறுப்பினராக்கி, அவர்களது திறமைகளை வளர்க்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.தொடர்ந்து, விளையாட்டு உபகரணங்கள் கொண்டு செல்லும் வாகனங்களை, கொடியசைத்து அமைச்சர் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில், 122 சுய உதவிக்குழுக்களின், 192 பயனாளிகளுக்கு, 12.58 கோடி ரூபாய் மதிப்பில் கடனுதவிகளை வழங்கினார்.
மாவட்ட எஸ்.பி., தங்கதுரை, டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், திட்ட இயக்குனர்கள் கவிதா, பெரியசாமி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மணிமேகலைநாகராஜ், நகராட்சி தலைவர் பரிதா நவாப் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.