/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'அறிவிப்பு வராமலே ஆரம்பம்' கிருஷ்ணகிரி காங்.,ல் கலாட்டா
/
'அறிவிப்பு வராமலே ஆரம்பம்' கிருஷ்ணகிரி காங்.,ல் கலாட்டா
'அறிவிப்பு வராமலே ஆரம்பம்' கிருஷ்ணகிரி காங்.,ல் கலாட்டா
'அறிவிப்பு வராமலே ஆரம்பம்' கிருஷ்ணகிரி காங்.,ல் கலாட்டா
ADDED : மார் 13, 2024 02:37 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி தொகுதியில் இதே மாவட்டத்தை சேர்ந்தவருக்கே, 'சீட்' ஒதுக்க, காங்., கட்சியினர் மாநில தலைவர் செல்வபெருந்தகையிடம் மனு அளித்துள்ளனர்.
தி.மு.க., கூட்டணியில், காங்., கட்சிக்கு, 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் கடந்த முறை வழங்கிய தொகுதிகளே பெரும்பாலும் வழங்க வாய்ப்புள்ளது.
கிருஷ்ணகிரி தொகுதியில் கடந்தமுறை, காங்., செல்லக்குமார் வெற்றி பெற்றார். அவரையே இம்முறையும் களமிறக்க கட்சி திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் காங்., மாநில பொறுப்பாளர் ஸ்ரீவல்லபிரசாத், மாநில தலைவர் செல்வபெருந்தகை ஆகியோரிடம், காங்., நிர்வாகிகளான மாநில பொதுக்குழு உறுப்பினர் நீலகண்டன், மாநில சிறுபான்மை பிரிவு துணைத்தலைவர் சாதிக்கான், கிருஷ்ணகிரி மாவட்ட துணைத்தலைவர் ரஹமதுல்லா மற்றும் மாவட்ட, வட்டார நிர்வாகிகள் சந்தித்து மனு அளித்துள்ளனர்.
அதில், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த, காங்., வேட்பாளருக்கு வாய்ப்பளியுங்கள். செல்லக்குமாரை மீண்டும் வேட்பாளராக்கினால் நமக்கு பின்னடைவு. எனவே மண்ணின் மைந்தர்களுக்கு 'சீட்' வழங்குங்கள், என தெரிவித்துள்ளனர்.
தொகுதிக்கு வேட்பாளர் அறிவிப்பே அதிகாரபூர்வமாக வராத நிலையில், வேட்பாளரை மாற்றக்கோரி அக்கட்சியினர் மனு கொடுத்து, தேர்தல் சலசலப்பை தொடங்கி வைத்துள்ளனர்.

