ADDED : ஜூலை 28, 2025 04:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடியில் உள்ள தனியார் கல்லுாரியில், மாநில அளவிலான பள்ளிகளுக்கு இடையே வாலிபால், கூடைப்பந்து, கால்பந்து, எரிபந்து போட்டிகள் தனித்தனியாக நடந்தன.
இதில், வாலிபால் இறுதி போட்டியில், ஓசூர் தனியார் பள்ளியும், கடலுார் மாவட்ட தனியார் பள்ளியும் விளையாடின. இதில், 23 - 25, 23 - 25 என்ற நேர் செட் கணக்கில், ஓசூர் தனியார் பள்ளி தோல்வியடைந்து, மாநில அளவில் இரண்டாமிடம் பெற்றது.