/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாநில மூத்தோர் தடகள போட்டி பதக்கம் வென்றவர்களுக்கு பாராட்டு
/
மாநில மூத்தோர் தடகள போட்டி பதக்கம் வென்றவர்களுக்கு பாராட்டு
மாநில மூத்தோர் தடகள போட்டி பதக்கம் வென்றவர்களுக்கு பாராட்டு
மாநில மூத்தோர் தடகள போட்டி பதக்கம் வென்றவர்களுக்கு பாராட்டு
ADDED : டிச 24, 2025 07:57 AM
கிருஷ்ணகிரி: மாநில அளவிலான மூத்தோர் தடகள போட்டியில் பதக்கம் வென்றவர்களை பாராட்டினர்.
தமிழ்நாடு, மூத்தோர் தடகள சங்கத்தின் சார்பில், மாநில அள-விலான தடகள போட்டிகள் கடந்த, 20, 21ல் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைகழகத்தில் நடந்தது. மாநிலம் முழுவதும் இருந்து, 30 முதல், 100 வயது வரை உள்ள, 2,100 வீரர்களும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து, 56 வீரர்-களும் பங்கேற்றனர். இதில் பரிமளா, ஈட்டி எறியும் போட்டியில் தங்கமும், குண்டு எறியும் போட்டியில் வெள்ளியும், தட்டு எறியும் போட்டியில் வெண்கல பதக்கமும் பெற்றார்.
சாரதா என்பவர், 5,000 மீ., நடைப்போட்டி மற்றும், 1,500 மீ., ஓட்டப்போட்டியில் தங்கம் வென்றார். வெங்கட்ராமன், 5,000 மீ., நடைப்போட்டியில் தங்கமும், ஜமுனா, 100 மீ., ஓட்டப் போட்டியில் வெண்கலமும், முருகன் மற்றும் ஜெயபிரகாஜ் ஆகியோர் ஈட்டி எறியும் போட்டியில் வெண்கலமும், சுதாகர், 5,000 மீ., நடைப்போட்டியில் வெண்கல பதக்கமும் வென்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு, 5 தங்கம், 2 வெள்ளி, 6 வெண்-கல பதக்கம் பெற்ற வீரர், வீராங்கனைகளை, மாவட்ட மூத்தோர் தடகள சங்க தலைவர் ரமேஷ், செயலாளர் மாதையன், பொரு-ளாளர் சத்தியநாதன் ஆகியோர் பாராட்டினர். இதில் வெற்றி பெற்-றவர்கள் வரும் ஜன., 27, 28, 29ல் திருவனந்தபுரத்தில் நடக்கும், தேசிய மூத்தோர் தடகள போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

