/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரி ஆடவர் கலைக்கல்லுாரியில் தொழில்நெறி வழிகாட்டும் கருத்தரங்கு

ADDED : டிச 24, 2025 07:57 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லுாரியில், வேலை-வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், தொழில்-நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடந்தது.
மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், கருத்தரங்கை துவக்கி வைத்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு மற்றும் கேடயங்களை வழங்கி பேசு-கையில், ''கல்லுாரி மாணவ, மாணவியர் பயன்பெற, தொழில்-நெறி வழிகாட்டும் கருத்தரங்கு நடக்கிறது.
இதில், யு.பி.எஸ்.சி., - எஸ்.எஸ்.சி., - ஆர்.ஆர்.பி., - ஐ.பி.பி.எஸ்., உள்ளிட்ட போட்டி தேர்வுகளை எதிர்கொள்வது குறித்து விளக்கம் அளிக்கப்படுகிறது. இதில், பயிற்சி பெற்றவர்-களில் பலர், அரசு பணிகளில் பணியாற்றி வருகின்றனர். எனவே, மாணவ, மாணவியர் இதை பயன்படுத்தி பல்வேறு போட்டி தேர்வுகளில் வெற்றிபெற வேண்டும்,'' என்றார். தொடர்ந்து, பல்-வேறு போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள், வரைப்படங்க-ளுடன் கூடிய தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி அமைத்துள்-ளதை பார்வையிட்டார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவு-ரிசங்கர், கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லுாரி முதல்வர் அனுராதா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.