/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.65.78 லட்சத்தில் பணிகள் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
/
ரூ.65.78 லட்சத்தில் பணிகள் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ரூ.65.78 லட்சத்தில் பணிகள் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ரூ.65.78 லட்சத்தில் பணிகள் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : டிச 24, 2025 07:58 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஒன்றியம், முத்தாலி பஞ்., உட்-பட்ட பூதிநத்தம் கிராமத்தில், ரேஷன் கடை இல்லாததால், உணவு பொருட்கள் வாங்க, 3 கி.மீ., தொலைவிலுள்ள முத்தாலி கிராமத்திற்கு மக்கள் சென்று வந்தனர். அதனால், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், 9 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய ரேஷன் கடை கட்டப்பட்டுள்ளது. ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், ரேஷன் கடையை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில் போன்ற உணவு பொருட்களை வழங்கினார். ஓசூர், மாநகர துணை மேயர் ஆனந்தய்யா, தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் கஜேந்திரமூர்த்தி, ராமமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.
சூளகிரி அருகே, மருதாண்டப்பள்ளி கிராமத்தில், அங்கன்வாடி மையத்தை எம்.எல்.ஏ., பிரகாஷ் திறந்து வைத்தார். மேலும், 36.10 லட்சம் ரூபாய் மதிப்பில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்-ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணி, 27.75 லட்சம் ரூபாய் மதிப்பில், 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்-நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணி, 1.93 லட்சம் ரூபாய் மதிப்பில் சிமென்ட் சாலை என, வளர்ச்சி திட்ட பணிகளுக்கு எம்.எல்.ஏ., பிரகாஷ் பூமி பூஜை செய்தார். 15 துாய்மை பணியா-ளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ., முருகன், இளைஞரணி மாநில துணை செயலாளர் சீனிவாசன், ஒன்றிய செயலாளர்கள் பாக்கியராஜ், நாகேஷ், துணை செயலாளர் சித்தராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

