/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஆட்சி மொழி சட்ட வார விழா அரசு கல்லுாரியில் பட்டிமன்றம்
/
ஆட்சி மொழி சட்ட வார விழா அரசு கல்லுாரியில் பட்டிமன்றம்
ஆட்சி மொழி சட்ட வார விழா அரசு கல்லுாரியில் பட்டிமன்றம்
ஆட்சி மொழி சட்ட வார விழா அரசு கல்லுாரியில் பட்டிமன்றம்
ADDED : டிச 24, 2025 07:58 AM
கிருஷ்ணகிரி: ஆட்சி மொழி சட்ட வார விழாவையொட்டி, அரசு மகளிர் கலைக்கல்லுாரியில் பட்டிமன்றம் நடந்தது.
மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை, 2025-2026ம் ஆண்டிற்கான ஆட்சி மொழி சட்ட வார விழா கடந்த, 17 முதல் வரும், 26 வரை கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, கிருஷ்ண-கிரி அரசு மகளிர் கலைக்கல்லுாரியில், ஆட்சி மொழிச்சட்டம் பற்-றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கல்லுாரி மாணவி-யரின் பட்டிமன்றம் நேற்று நடந்தது. தமிழ்த்துறை தலைவர் கல்-பனா வரவேற்றார். கல்லுாரி முதல்வர் கீதா தலைமை வகித்தார். தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் கனிமொழி பேசினார்.
இதில், 'தமிழ் மொழியை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் கடமை பெற்றோருக்கே' என்ற அணியில், சத்யா, ரோஜா, லாவண்யா ஆகிய மாணவியரும், 'ஆசிரியருக்கே' என்ற அணியில் தமிழ்செல்வி, சுகன்யா, பவித்ரா ஆகியோரும் பேசினர். தமிழ்துறை கவுரவ விரிவுரையாளர் ஜோதிமணி பட்டி-மன்ற நடுவராக செயல்பட்டார்.
இதில், தமிழ் வளர்ச்சித்துறையோடு இணைந்து, இக்கல்லுாரி மாணவியருக்கான, முத்தமிழ் அறிஞர் கலைஞர் மாணவர் தமிழ்-மன்றம் சார்பில், கவிதை போட்டி, பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு மொத்தம், 33,000 ரூபாய் பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழ்த்-துறை கவுரவ விரிவுரையாளர் பாரதி நன்றி கூறினார்.

