sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஏமனுாரில் வீட்டுமனை பட்டா கேட்டு திருவோடு ஏந்தி மக்கள் போராட்டம்

/

ஏமனுாரில் வீட்டுமனை பட்டா கேட்டு திருவோடு ஏந்தி மக்கள் போராட்டம்

ஏமனுாரில் வீட்டுமனை பட்டா கேட்டு திருவோடு ஏந்தி மக்கள் போராட்டம்

ஏமனுாரில் வீட்டுமனை பட்டா கேட்டு திருவோடு ஏந்தி மக்கள் போராட்டம்


ADDED : டிச 24, 2025 07:58 AM

Google News

ADDED : டிச 24, 2025 07:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பென்னாகரம்: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்-பட்ட கிழக்கு ஏமனுார், மேற்கு ஏமனுார், ஆதிதிராவிடர் தெரு, ஆத்துமேட்டூர், தோழன் காட்டு வளவு, சிங்காபுரம் உள்ளிட்ட பகுதியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.

இவர்கள், மேட்டூர் அணை நீர்த்தேக்க பகுதிகளில் குடியிருந்து, அணை கட்டும் போது மேடான இப்பகுதிக்கு குடிபெயர்ந்த-வர்கள். இவர்கள் அடிப்படை வசதி கேட்டு பல போராட்டங்-களை நடத்திய பின், கடந்த, 1997ல், 437 பேருக்கு வீட்டுமனை கொடுக்கப்பட்டது.

கடந்த ஐந்து ஆண்டுகளாக அரசின் புதிய தொகுப்பு வீடுகள், புதிய மின் இணைப்பு, சிமென்ட் சாலை உள்ளிட்ட எந்த வசதி-களும் அப்பகுதி மக்களுக்கு இல்லை. இதனால், வீடு, மின்சாரம், உள்ளிட்டவற்றிற்கு மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'மின் இணைப்பு கேட்டால், அங்குள்ள நிலங்களுக்கு பட்டா இல்லை என அதிகா-ரிகள் தட்டி கழிக்கின்றனர். 1997ல், கொடுத்த பட்டா, 'அ' பதி-வேட்டில் இல்லை. எனவே, வனத்துறைக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்யக்கூடாது என வனத்துறையினர் வெளியேற்றுகின்றனர். அணையில், நீர் அதிகரிக்கும் போது, மீன் பிடித்தலும், தண்ணீர் குறையும் போது, விவசாயம் செய்து கால்ந-டைகளை வளர்த்தும் வாழ்கிறோம். இங்குள்ள வீடுகளுக்கும், விவசாய நிலங்களுக்கும் பட்டா கேட்டு, பலமுறை அதிகாரிக-ளிடம் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை' என்-றனர்.

நேற்று அவர்கள், வீட்டுமனை பட்டா கேட்டு, மேற்கு ஏம-னுாரில் அச்சுற்றுவட்டார பகுதி மக்கள், 200க்கும் மேற்பட்டோர், ஊர் தர்மகர்த்தா கோவிந்தன் தலைமையில், திருவோடு ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us