ADDED : டிச 13, 2024 08:59 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், விளையாட்டு பள்ளி மற்றும் விடுதி மாணவ, மாணவியருக்கு, மாநில அளவிலான தேக்-வாண்டோ விளையாட்டு போட்டிகள் நடந்தன. கிருஷ்ணகிரி, தர்மபுரி, கடலுார், திருச்சி மற்றும் பெரம்பலுார் ஆகிய மாவட்டத்தில் இருந்து, 100 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
இப்போட்டிக்கு, திருவண்ணாமலை மண்டல முதுநிலை மேலாளர் நொய்லின் ஜான் தலைமை வகித்தார். கால்பந்து பயிற்றுனர் மற்றும் விடுதி மேலாளர் (பொ) சுப்பிரமணி வரவேற்றார். போச்-சம்பள்ளி, 7வது பட்டாளியன் எஸ்.பி., சங்கு போட்டியை துவக்கி வைத்தார். 7வது பட்டா-ளியன் ஏ.டி.எஸ்.பி., வெங்கடாசலம் பங்கேற்றார். தமிழ்நாடு தேக்வாண்டோ சங்க பொதுச்-செயலாளர் செல்வமணி போட்டியை வழிநடத்-தினார்.
இப்போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்க-னைகளுக்கு, மாவட்ட இளைஞர் குழு ஒருங்கி-ணைப்பாளர் தினேஷ் ராஜன், மாவட்ட விளை-யாட்டு அலுவலர் ராஜகோபால் ஆகியோர் சான்-றிதழ்களை வழங்கி பாராட்டினர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பணியா-ளர்கள் குடிலரசன் (தடகள பயிற்றுனர்), செங்குட்-டுவன் (கைப்பந்து பயிற்றுனர்) மற்றும் வினோத்-குமார் (ஜூடோ பயிற்றுனர்) ஆகியோர் போட்டி-களை நடத்தினர். தேக்வாண்டோ பயிற்றுனர் சங்கர் நன்றி கூறினார்.