ADDED : நவ 07, 2025 12:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், ஈரோட்டில் உள்ள தனியார் கல்லுாரியில், கடந்த இரு தினங்களாக மாநில அளவிலான கையுந்து பந்து, கூடைப்பந்து, கபடி மற்றும் மட்டைப்பந்து போன்ற விளையாட்டுகள் நடந்தன. இதில் ஓசூர் பகுதியில் தங்கவேலு அய்யா வாலிபால் அகாடமியில் பயிற்சி பெறும் தனியார் பள்ளி மாணவியர் கலந்து கொண்டு முதலிடம் பிடித்தனர்.
கையுந்து பந்து போட்டியில், ஓசூர் யோகி வேமண்ணா பள்ளி முதலிடம் பிடித்து சாதனை படைத்தது. வெற்றி பெற்ற மாணவியருக்கு சான்றிதழ்கள் மடல்கள், கோப்பை மற்றும், 5,000 ரூபாய் பரிசு வழங்கி, அவர்களை ஆசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர் மாணிக்கவாசகம் உள்ளிட்டோர் பாராட்டினர்.

