/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அரசு பள்ளியில் தமிழ் கூடல் விழா
/
அரசு பள்ளியில் தமிழ் கூடல் விழா
ADDED : நவ 07, 2025 12:45 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, ஜாகிர் வெங்கடாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில், இலக்கிய மன்றத்தின் சார்பில், தமிழ்கூடல் விழா நடந்தது. தலைமை ஆசிரியர் சுதாராணி தலைமை வகித்தார். பட்டதாரி ஆசிரியை பார்வதி வரவேற்றார். விழாவில், திருக்குறள் ஒப்புவித்தல், பாரதியார், பாரதிதாசன் மற்றும் தேசபக்தி பாடல் பாடுதல், காவடி ஆட்டம், பாரம்பரிய நடனங்கள், கருத்தரங்கம், கவியரங்கம், கவிதை வாசித்தல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில், போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
விழாவில், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை கலைச்செல்வி, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகளை வழங்கி பேசினார். உதவி தலைமை ஆசிரியர் சங்கர் நன்றி கூறினார். இதில், திரளான மாணவ, மாணவியர் மற்றும்
பெற்றோர்கள் பங்கேற்றனர்.

