ADDED : ஜூன் 21, 2025 12:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்ட சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் துறை உதவி இயக்குனர் வர்ஷா மற்றும் அதிகாரிகள், சூளகிரி அடுத்த உத்தனப்பள்ளி அருகே பீர்ஜேப்பள்ளி பஸ் ஸ்டாப்பில், நேற்று முன்தினம் மாலை வாகன சோதனை செய்தனர்.
அவ்வழியாக வந்த மினி டிப்பர் லாரியில் சோதனை செய்த போது, உரிய அனுமதி சீட்டு இல்லாமல், அகரம் கிராமத்தில் இருந்து ஓசூருக்கு ஒரு யூனிட் கல்லை கடத்தி செல்வது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், உத்தனப்பள்ளி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிந்து, லாரி டிரைவர், உரிமையாளரை தேடி வருகின்றனர்.