/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
30 ஆண்டுக்கு முன் கண்டெடுக்கப்பட்ட கற்களால் ஆன சுவாமி சிலைகள் மீட்பு

ADDED : மே 05, 2025 02:37 AM
போச்சம்பள்ளி: போச்சம்பள்ளியில், 30 ஆண்டுகளுக்கு முன் கண்டெடுக்கப்பட்ட சுவாமி சிலைகள் மீட்கப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த நாகோஜனஹள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட, கம்புகாலப்பட்டி கிராமத்தில், சிவாஜி, 38, என்பவரின் சுவாதீனத்தில் இருந்து வரும் விவசாய நிலத்தில், 30 ஆண்டுகளுக்கு முன்பு உழுதபோது, பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி உள்ளிட்ட கற்களால் ஆன சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டு, தற்போது வரை பராமரிப்பு மற்றும் பூஜை செய்யாமல், தனது விவசாய நிலத்தில் வைத்திருந்தது தெரியவந்தது.தகவல் அறிந்த போச்சம்பள்ளி தாசில்தார் சத்யா உத்தரவின்படி, சுவாமி சிலைகளை மீட்டு, கிருஷ்ணகிரி அருங்காட்சியகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதேபோல், பாரூரில் களத்தில் வீரன் காளையை அடக்குவது போல் கண்டெடுக்கப்பட்ட கற்சிலையையும், போச்சம்பள்ளி தாசில்தார் நடவடிக்கையின் பேரில் கிருஷ்ணகிரி அருங்காட்சியகத்திற்கு பொதுமக்கள் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நாகரசம்பட்டி ஆர்.ஐ., கலைச்செல்வி, பாரூர் ஆர்.ஐ.,
சசிகுமார் உடனிருந்தனர்.