/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கல்லுாரி மாணவியை தரக்குறைவாக பேசிய இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை கோரி மறியல்
/
கல்லுாரி மாணவியை தரக்குறைவாக பேசிய இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை கோரி மறியல்
கல்லுாரி மாணவியை தரக்குறைவாக பேசிய இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை கோரி மறியல்
கல்லுாரி மாணவியை தரக்குறைவாக பேசிய இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை கோரி மறியல்
ADDED : செப் 19, 2024 07:00 AM
ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே, சாரண்டப்பள்ளியை சேர்ந்தவர் சுபாஷ், 25. லாரி தொழில் செய்து வருகிறார்; இவர், தனியார் கல்-லுாரியில் முதலாமாண்டு படிக்கும், 18 வயது மாணவியை காத-லித்து வந்தார்.
தன்னை திருமணம் செய்ய சுபாஷ் கட்டாயப்படுத்தி வந்த நிலையில், மாணவியை கடத்த சுபாஷ் தரப்பினர் முயற்சி செய்-துள்ளனர்.
மாணவி, தளி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்-பெக்டர் கணேஷ்குமார் நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடித்த-துடன், மாணவியை
தரக்குறைவாக பேசியுள்ளார். நேற்று முன்-தினம், இ.கம்யூ., கட்சியினர் சாலைமறியல் போராட்டம் செய்த நிலையில், சுபாஷை
போலீசார் கைது செய்தனர்.மாணவியை தரக்குறைவாக பேசிய இன்ஸ்பெக்டர் கணேஷ்-குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவிக்கு தொந்தரவு
கொடுத்த சுபாஷ் தரப்பை சேர்ந்த, 15 பேரை கைது செய்து, மாணவியை கடத்த பயன்படுத்திய வாகனத்தை பறி-முதல் செய்ய
வலியுறுத்தி, இ.கம்யூ., கட்சியினர் மற்றும் மாண-வியின் உறவினர்கள், தளி, இ.கம்யூ., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரன், மாநில
நிர்வாக்குழு உறுப்பினர் லகுமைய்யா ஆகியோர் தலை-மையில், நேற்று காலை, தேன்கனிக்கோட்டை பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே,
அஞ்செட்டி சாலையில் மறியலில் ஈடுபட்-டனர். ஏ.டி.எஸ்.பி., சங்கர், டி.எஸ்.பி., சாந்தி ஆகியோர் பேச்சு-வார்த்தை நடத்தி, உரிய
நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்-ததால் போராட்டம் கைவிடப்பட்டது.

