/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
படிக்கவில்லை என கண்டித்ததால் ஏரியில் குதித்து மாணவி தற்கொலை
/
படிக்கவில்லை என கண்டித்ததால் ஏரியில் குதித்து மாணவி தற்கொலை
படிக்கவில்லை என கண்டித்ததால் ஏரியில் குதித்து மாணவி தற்கொலை
படிக்கவில்லை என கண்டித்ததால் ஏரியில் குதித்து மாணவி தற்கொலை
ADDED : ஜூன் 29, 2025 01:18 AM
ஓசூர், கர்நாடகா மாநிலம், மாலுாரை சேர்ந்தவர் நாராயணசாமி, 40. இவர் மனைவி ராணியம்மா, 36. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே கொத்தகொண்டப்பள்ளியில் தங்கி, கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களது மகள் துளசி, 13. ஓசூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வந்தார். சரியாக படிக்காமல் இருந்ததால், அவரது தாய் ராணியம்மா கண்டித்துள்ளார்.
கடந்த, 26ம் தேதி மாணவி பள்ளி
க்கு செல்லாமல், வீட்டில் இருந்ததால், தாய் கேள்வி எழுப்பினார். இதனால் விரக்தியடைந்த மாணவி, வீட்டிலிருந்து வெளியேறி அன்று மாலை வரை வீடு திரும்பவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை கொத்தகொண்டப்பள்ளி ஏரியில், மாணவி துளசியின் சடலம் மிதந்தது. மீன் பிடிக்க சென்றவர்கள் கொடுத்த தகவல்படி, மத்தி
கிரி போலீசார் சடலத்தை மீட்டு விசாரித்தனர். இதில், மாணவி ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.