/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வலி மாத்திரை சாப்பிட்ட மாணவர் சாவு
/
வலி மாத்திரை சாப்பிட்ட மாணவர் சாவு
ADDED : ஆக 11, 2025 02:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரிகை:தலைவலிக் கு, மருந்தகத்தில் மாத்திரை வாங்கி சாப்பிட்ட மாணவர் உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை, மிடுதேப்பள்ளியை சேர்ந்தவர் தியாகராஜ், 12; அரசு பள்ளி ஏழாம் வகுப்பு மாணவர். ஆக., 8ல், காலை தலைவலியால் பள்ளிக்கு செல்லவில்லை. பெற்றோர், மாத்திரை வாங்கி கொடுத்தனர். அதை சாப்பிட்ட, சிறிது நேரத்தில், மூக்கு வழியாக சளி அதிகம் வந்துள்ளது.
பெற்றோர், அப்பகுதி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். பின், வீட்டிற்கு அழைத்து செல்லும் வழியில், மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, வழியிலேயே மாணவர் உயிரிழந்தார்.