/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
டிராக்டர் மீது பைக் மோதல் மாணவன் பலி; டிரைவர் கைது
/
டிராக்டர் மீது பைக் மோதல் மாணவன் பலி; டிரைவர் கைது
டிராக்டர் மீது பைக் மோதல் மாணவன் பலி; டிரைவர் கைது
டிராக்டர் மீது பைக் மோதல் மாணவன் பலி; டிரைவர் கைது
ADDED : அக் 03, 2025 01:32 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அருகே, சின்ன பெல்லாரம்பள்ளியை சேர்ந்தவர் பூங்காவனம். இவருக்கு, தேவபிரசாந்த், 13, கோபிநாத், 10, என இரு மகன்கள். மூத்த மகன் தேவபிரசாந்த், பெல்லாரம்பள்ளியிலுள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில், 9ம் வகுப்பும், இளைய மகன் கோபிநாத், சின்ன பெல்லாரம்பள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், 5ம் வகுப்பு படித்து வந்தனர்.
கடந்த, 30ம் தேதி இரவு, 7:30 மணிக்கு, சின்ன பெல்லாரம்பள்ளி - பாலேகுறி சாலையில், அண்ணன், தம்பி இருவரும், ஹீரோ ஸ்பிளண்டர் பைக்கில் சென்றனர். அண்ணன் தேவபிரசாந்த் பைக்கை ஓட்டினார்.
ஊரிலுள்ள தண்ணீர் தொட்டி அருகே சென்றபோது, கிருஷ்ணகிரி அருகே குருதத்தனுார் இருளர் காலனியை சேர்ந்த டிராக்டர் டிரைவர் திம்மராஜ், 40, எந்த முன்னெச்சரிக்கையும் செய்யாமல் சாலையில் டிராக்டரை நிறுத்தியிருந்தார். அதனால், டிராக்டர் பின்னால் பைக் மோதியதில், தேவபிரசாந்த் சம்பவ இடத்திலேயே பலியானார். கோபிநாத் படுகாயமடைந்தார். விபத்திற்கு காரணமான டிராக்டர் டிரைவர் திம்மராஜை, நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் கைது செய்தனர்.