நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அடுத்த பாளேதோட்டத்தை சேர்ந்தவர் சிவக்குமார், 21; திருச்செங்கோட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார்.
விடுமுறைக்கு ஊருக்கு வந்த இவர், கடந்த, 22ல் வீட்டிலிருந்து பைக்கில் வெளியே சென்றார். மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர் நேற்று முன்தினம் அளித்த புகார் படி, போச்சம்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.