/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
நாளந்தா சர்வதேச பொதுப்பள்ளியில் மாணவர் தலைவர் பொறுப்பேற்பு
/
நாளந்தா சர்வதேச பொதுப்பள்ளியில் மாணவர் தலைவர் பொறுப்பேற்பு
நாளந்தா சர்வதேச பொதுப்பள்ளியில் மாணவர் தலைவர் பொறுப்பேற்பு
நாளந்தா சர்வதேச பொதுப்பள்ளியில் மாணவர் தலைவர் பொறுப்பேற்பு
ADDED : ஜூலை 31, 2025 01:34 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி நாளந்தா சர்வதேச பொதுப்பள்ளியில், மாணவர் தலைமை பதவிக்கான பொறுப்பேற்பு விழா நடந்தது. மாணவர்களின் பொறுப்புணர்வையும், தலைமை திறமையையும் மேம்படுத்த நடந்த இந்த விழாவில், மாணவர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி நிறுவனர் கொங்கரசன் தலைமை வகித்தார். தாளாளர் சாமுண்டீஸ்வரி கொங்கரசன், பள்ளி நிர்வாக இயக்குனர்கள் வக்கீல் கவுதமன், டாக்டர் புவியரசன், பள்ளி கல்வி இயக்குனர், முதல்வர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு காவல்துறை அதிகாரியும், அனைத்து இந்திய கையுந்து பந்து வீரரும், தமிழ்நாடு மாநில கையுந்து பந்து சங்க இணைச்செயலாளருமான சதாசிவன் பேசுகையில், ''தலைமை என்பது அதிகாரம் அல்ல, அது ஒரு பொறுப்பு, அப்பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்,'' என்றார்.
இதில், பள்ளி மாணவர் தலைவர், துணைத்தலைவர், ஹவுஸ் தலைவர்கள் மற்றும் மாணவர் சங்க தலைவர்கள் அனைவரும், உறுதிமொழி எடுத்து பதவியேற்றுக் கொண்டனர். பள்ளி முதல்வர், அவர்களுக்கு பதவி சின்னங்களை வழங்கி, வாழ்த்தி பேசினார். விழாவில் பெற்றோர்,
ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.