/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பூச்சிகளை கட்டுப்படுத்தும் 3 ஜி கரைசல் விவசாயிகளுக்கு மாணவியர் விளக்கம்

ADDED : டிச 27, 2025 05:40 AM
சூளகிரி; கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே காமன்-தொட்டி கிராமத்தில், வட்டார வேளாண்மைத்-துறை சார்பில், பயிர்களை தாக்கும் பூச்சிகளை இயற்கை முறையில் விரட்டும், 3 ஜி கரைசல் தயார் செய்யும் முறை குறித்து, விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
சூளகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். அதியமான் வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி கல்லுாரியின் இளம் அறிவியல், 4ம் ஆண்டு மாணவியர், 12 பேர் கொண்ட குழுவினர், விவசாயிகளுக்கு கரைசல் தயார் செய்ய
எடுத்துரைத்தனர்.
பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை சம அளவில் அரைத்து, ஒரு லிட்டர் நாட்டு மாட்டு கோமியத்துடன் கலந்து, 3 ஜி கரைசல் தயார் செய்யலாம் எனவும், இதன் மூலம் அசுவினி, இலைப்பேன் போன்ற பூச்சிகளை கட்டுப்படுத்தலாம் என்றும், மாடித்-தோட்டம் மற்றும் விவசாயத்தில், 3 ஜி கரைசல் பெரும் உதவியாக இருக்கும் இருக்கும் என்றும், மாணவியர் விவசாயிகளுக்கு விளக்கி
கூறினர்.