/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
விரும்பும் பாடங்களை எடுத்து படித்தால் மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாகும்'
/
விரும்பும் பாடங்களை எடுத்து படித்தால் மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாகும்'
விரும்பும் பாடங்களை எடுத்து படித்தால் மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாகும்'
விரும்பும் பாடங்களை எடுத்து படித்தால் மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாகும்'
ADDED : மே 15, 2025 01:19 AM
கிருஷ்ணகிரி:''விரும்பும் பாடங்களை எடுத்து படித்தால், மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாகும்,'' என, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் பேசினார்.
சென்னை, அண்ணா நுாற்றாண்டு நுாலக அரங்கத்தில், 'நான் முதல்வன்' திட்டத்தில், 'கல்லுாரி கனவு 2025' நிகழ்ச்சியை, தமிழக துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைத்தார். தொடர்ந்து, கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், 'நான் முதல்வன்' திட்டத்தில், 'கல்லுாரி கனவு 2025' நிகழ்ச்சியை, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் துவக்கி வைத்து, மாணவர்களுக்கு கல்லுாரி கனவு வழிகாட்டி கையேடுகளை வழங்கி பேசியதாவது:
பிளஸ் 2 வகுப்பு பயின்ற பிறகு, உயர்கல்வி சேரும் மாணவர்களின் சதவீதம் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகமாக உள்ளது. இந்த சதவிகிதத்தை மேலும் அதிகரிக்கும் விதமாக, மாணவர்கள் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எப்படி படிக்கலாம், படிப்பதற்கு என்னென்ன, உதவிகள் இருக்கிறது, உள்ளிட்டவை குறித்தும், பொறியியல் மற்றும் மருத்துவம் தவிர்த்து நிறைய படிப்புகள் உள்ளன. இது குறித்த விபரங்கள் கையேடுகளில் உள்ளன. மாணவர்கள் எடுத்த மதிப்பெண்களை வைத்து, உயர்கல்வி படிக்காமல், தங்களுக்கு விரும்பிய பாடங்கள், துறைகளில் படித்தால் எதிர்காலம் சிறப்பாக அமையும். அவற்றை படிப்பதற்கு தகுதியான கல்லுாரிகள், கடனுதவிகள் குறித்து விளக்கமும் அளிக்கப்படுகிறது. இவ்வாறு, அவர் பேசினார்.
டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், மாவட்ட சி.இ.ஓ., முனிராஜ், இந்தியன் வங்கி முன்னோடி வங்கி மேலாளர் சரவணன், பள்ளி, கல்லுாரி ஆசிரியர்கள், கல்வித்துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.