/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
இறை வணக்க கூட்டத்திற்கு கூட இடமில்லா அரசு பள்ளி ஓசூரில் மாணவர்கள் தவிப்பு
/
இறை வணக்க கூட்டத்திற்கு கூட இடமில்லா அரசு பள்ளி ஓசூரில் மாணவர்கள் தவிப்பு
இறை வணக்க கூட்டத்திற்கு கூட இடமில்லா அரசு பள்ளி ஓசூரில் மாணவர்கள் தவிப்பு
இறை வணக்க கூட்டத்திற்கு கூட இடமில்லா அரசு பள்ளி ஓசூரில் மாணவர்கள் தவிப்பு
ADDED : ஆக 15, 2025 11:30 PM

ஓசூர்:ஓசூரில், காலையில் இறைவணக்க கூட்டம் நடத்த கூட அரசு பள்ளியில் போதிய இடமில்லாததால், மாணவ - மாணவியர் சிரமப்படுகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தேர்ப்பேட்டையில் 1960 முதல், சூடவாடி அரசு துவக்கப்பள்ளி இயங்குகிறது. ஓசூர் மலைக்கோவில் அடிவாரத்தில் சிறிய பாறை மீது, இப்பள்ளிக்கு கட்டடம் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. பள்ளி தலைமையாசிரியராக பவுன்துரை உள்ளார்.
இப்பள்ளியில் மொத்தம், 486 மாணவ - மாணவியர் படிக்கின்றனர். ஒவ்வொரு வகுப்பிற்கும் தனித்தனி சீருடைகள் வழங்கப்பட்டு, தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் இப்பள்ளி செயல்படுகிறது.
மாவட்டத்திலேயே துவக் கப்பள்ளிகளில் அதிகபட்சமாக நடப்பாண்டு, 162 மாணவ - மாணவியர் இப்பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால், இப்பள்ளிக்கு விளையாட்டு மைதானம் இல்லை.
அது மட்டுமின்றி, காலையில் இறைவணக்க கூட்டம் நடத்த கூட இடவசதி இல்லாததால், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் இறைவணக்க கூட்டம் நடக்கிறது. பள்ளி முன், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான அடுக்குமாடி வீடுகள் பாழடைந்து, 15 ஆண்டுக்கும் மேலாக பயன்பாடின்றி உள்ளது.
அதை இடித்துவிட்டு, பள்ளி விளையாட்டு மைதானத்திற்கும், இறை வணக்க கூட்டத்திற்கும் இடத்தை வழங்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.