/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஊத்தங்கரையில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் சேதமான கட்டடத்தில் அமர்ந்த மாணவர்கள்

ADDED : ஜூலை 17, 2025 01:22 AM
ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த, உப்பாரப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நேற்று நடந்தது.
நிகழ்ச்சி ஏற்பாடுகள் ஒரு நாள் முன்னதாகவே நடந்தது. அதனால் முகாமிற்கு தேவையான கணினிகள், தண்ணீர் பாட்டில்கள், டேபிள், சேர் உள்ளிட்டவை, மாணவர்கள் படிக்கும் வகுப்பறைக்குள் வைக்கப்பட்டன.
இதற்காக, 4 வகுப்பறைகள் பயன்படுத்தப்பட்டன. மாணவர்களுக்கு போதிய வகுப்பறைகள் இல்லாததால், 2, 3ம் வகுப்பு மாணவ, மாணவியர் ஒரே வகுப்பறையில் அமர வைக்கப்பட்டனர். எஞ்சிய மாணவர்கள், கடந்த, 2 நாட்களாக, பள்ளி வளாகத்தில் சேதமாகி பயன்பாடின்றி உள்ள கட்டட வராண்டாவில் அமர வைக்கப்பட்டனர்.
இதனால் மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். மேலும், முகாமில், ஒலிபெருக்கி சத்தம் அதிகளவில் இருந்ததால், மாணவர்கள் பாடம் படிப்பதில் சிரமப்பட்டனர். ஊத்தங்கரையில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடத்த பல இடங்கள் இருந்தும், பள்ளி வளாகத்திற்குள் நடத்தியது, அப்பகுதி
மக்களிடையே அதிருப்தியை
ஏற்படுத்தியது.