/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சேறும், சகதியுமான பள்ளி வளாகம் அவதிப்படும் மாணவ, மாணவியர்
/
சேறும், சகதியுமான பள்ளி வளாகம் அவதிப்படும் மாணவ, மாணவியர்
சேறும், சகதியுமான பள்ளி வளாகம் அவதிப்படும் மாணவ, மாணவியர்
சேறும், சகதியுமான பள்ளி வளாகம் அவதிப்படும் மாணவ, மாணவியர்
ADDED : நவ 27, 2024 01:03 AM
சேறும், சகதியுமான பள்ளி வளாகம்
அவதிப்படும் மாணவ, மாணவியர்
போச்சம்பள்ளி, நவ. 27-
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் அடுத்த, மிண்டிகிரி கிராமத்தில் கடந்த, 7 ஆண்டுகளுக்கு முன், நபார்டு திட்டத்தில், அரசு உயர் நிலைப்பள்ளி கட்டடம் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த மிண்டிகிரி, கொத்தகோட்டை, களர்பதி, சந்தம்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த, 120க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வந்தனர். ஒவ்வோர் ஆண்டும் மழை காலத்தில், பள்ளி வளாகத்தில் மழை நீர் தேங்கி வடியாமல் சேரும், சகதியுமாக இருந்தது. இதனால் மாணவ, மாணவியர் இங்குள்ள கழிப்பறையை பயன்படுத்த முடியாமல், அவதிக்குள்ளாகினர். இதனால், பெரும்பான்மையான மாணவ, மாணவியர் இப்பள்ளியிலிருந்து நின்று, அருகிலுள்ள மத்துார் அரசு பள்ளியில் தற்போது சேர்ந்து படிக்கின்றனர்.
இப்பள்ளி வளாகத்தில் தேங்கியுள்ள மழை நீரால், பள்ளி கட்டடத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகி உள்ளதாக பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர். சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, மழை நீர் தேங்காமல், சேறு, சகதியை அப்புறப்படுத்தி பள்ளி கட்டடத்தை பாதுகாக்க, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.