/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
உள்ளாட்சி செயல்பாடுகளை பார்வையிட்ட மாணவியர்
/
உள்ளாட்சி செயல்பாடுகளை பார்வையிட்ட மாணவியர்
ADDED : நவ 08, 2025 03:52 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் காமராஜ் காலனி நடுநிலைப்பள்-ளியில் (தெலுங்கு, கன்னடம்) படிக்கும், 7ம் வகுப்பு மாணவ, மாணவியர், 50 பேர், உள்ளாட்சி அமைப்புகள் எவ்வாறு செயல்-படுகின்றன என்பதை அறிய, மாநகராட்சி அலுவலகத்திற்கு நேற்று அழைத்து செல்லப்பட்டனர்.
மாநகர மேயர் சத்யா, கமிஷனர் முகம்மது ஷபீர் ஆலம், துணை மேயர் ஆனந்தய்யா, பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்-வரன், கல்விக்குழு தலைவர் ஸ்ரீதரன், மாநகர நல அலுவலர் அஜிதா ஆகியோர், உள்ளாட்சி அமைப்புகளில் செயல்பாடுகள், நடைமுறைகள் குறித்து விளக்கி கூறினர். கடைசியில் மாணவ, மாணவியருக்கு நுால்கள் வழங்கப்பட்டு, குழு புகைப்படம் எடுக்-கப்பட்டது.முன்னதாக மேயர் சத்யா பேசும் போது, மாநகராட்சி மூலம் தினமும், 7,000 மாணவ, மாணவியர் பயன் பெறும் வகையில் காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது. தமிழக அரசு மாணவ, மாணவியருக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்றார். பள்ளி தலைமையாசிரியர் ராமச்சந்திரப்பா, தலைமையா-சிரியர் சுப்பிரமணியம் உட்பட பலர் பங்கேற்றனர்.

