/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேர் கைது
/
புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேர் கைது
ADDED : நவ 08, 2025 03:52 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் டவுன் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் நாகராஜ், எஸ்.எஸ்.ஐ., தமிழ்மணி மற்றும் போலீசார் நேற்று அதி-காலை, 4:00 மணிக்கு, ஓசூர் - ராயக்கோட்டை சாலையில் உள்ள அசோக் பில்லர் பகுதியில் வாகன சோதனை செய்தனர்.
அப்போது, பெங்களூருவிலிருந்து கோவை நோக்கி சென்ற வி.வி., டிராவல்ஸ் ஆம்னி பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் பெங்களூருவிலிருந்து கோவைக்கு, 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 105 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி செல்வது தெரிந்தது.
அதனால், பஸ்சுடன் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், 30க்கும் மேற்பட்ட பயணிகளை மாற்று பஸ்சில் கோவைக்கு அனுப்பினர். இது தொடர்பாக, கோவை பீளமேடு குரும்பர் வீதியை சேர்ந்த டிரைவர் மணிகண்டன், 21, என்பவரை போலீசார் கைது செய்தனர்.* ஓசூர் சிப்காட் ஸ்டேஷன் எஸ்.ஐ., பாலமுருகன் மற்றும் போலீசார், தமிழக எல்லையான ஓசூர் ஜூஜூவாடி சோதனைச்சா-வடி அருகே நேற்று முன்தினம் வாகன சோதனை செய்தனர். அவ்-வழியாக வந்த, மாருதி ஸ்விப்ட் டிசையர் காரை சோதனை செய்த போது, 25 ஆயிரத்து, 920 ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்கள், 2,880 ரூபாய் மதிப்புள்ள, 44 பாக்கெட் கர்நாடகா மதுபானங்களை, பெங்களூருவிலிருந்து, தென்காசி மாவட்டத்-திற்கு கடத்தி செல்வது தெரிந்தது.
அதனால், காரை ஓட்டி சென்ற, தென்காசி மாவட்டம், பாவூர்சந்-திரம் மேலப்பாவூர் சாலையை சேர்ந்த பீமராஜன், 45, என்பவரை போலீசார் கைது செய்தனர்.

