/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
விடுமுறை எடுக்காத மாணவர்கள் பாராட்டு விழா நடத்தி பரிசளிப்பு
/
விடுமுறை எடுக்காத மாணவர்கள் பாராட்டு விழா நடத்தி பரிசளிப்பு
விடுமுறை எடுக்காத மாணவர்கள் பாராட்டு விழா நடத்தி பரிசளிப்பு
விடுமுறை எடுக்காத மாணவர்கள் பாராட்டு விழா நடத்தி பரிசளிப்பு
ADDED : செப் 27, 2025 01:09 AM
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட் டம், ஓசூர் பேடரப்பள்ளி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், 885 மாணவ, மாணவியர், ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் படித்து வருகின்றனர். இடப்பற்றாக்குறை காரணமாக,, 3 இடங்களில் பள்ளி செயல்படுகிறது. நடப்பு கல்வியாண்டில் முதல் பருவத்தில் மொத்தம், 82 நாட்கள் பள்ளி வேலை நாட்கள் என, பள்ளிக்கல்
வித்துறை அறிவித்திருந்தது.நேற்றுடன், 82 நாட்கள் நிறைவு பெற்ற நிலையில், பள்ளிக்கு விடுமுறை எடுக்காமல் வந்திருந்த, 6 முதல், 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு பாராட்டு விழா நடந்தது.
ஆறாம் வகுப்பு மாணவர்கள் சதீஷ்குமார், கவுசிகா, சங்கர், ஏழாம் வகுப்பில், 6 பேர் மற்றும் எட்டாம் வகுப்பில் மாணவியர் ஹரிணி, கனிஷ்கா ஆகியோரை பாராட்டி, பள்ளி தலைமையாசிரியர் பொன் நாகேஷ் பரிசு வழங்கினார். அதேபோல் வித்யாஸ்ரீ, முகிலன், மனிஷா, கண்ணன் உட்பட, 20 மாணவ, மாணவியர், பள்ளி நுாலகத்திலிருந்து புத்தகங்களை எடுத்து சென்று முழுமையாக படித்திருந்தனர். அவர்களையும் பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.